ஹாசினி பேசும் படத்தில் அபியும் நானும்

சனி, 3 ஜனவரி 2009 (11:33 IST)
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹாசினியின் பேசும் படம் நிகழ்ச்சியில் இந்த வாரம் அபியும் நானும் திரைப்படம் இடம்பெறுகிறது.

ஜெயா டிவியில் நடிகை சுஹாசினி வழங்கும் ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சி, திரைப்படங்களைப் பற்றிய விமர்சனம் மற்றும் சுவையான தகவல்கள் அளிக்கிறது.

ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் அபியும் நானும் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான பிரகாஷ்ராஜ், இயக்குநர் ராதமோகன், நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராமன், குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு படத்தைப் பற்றியும், படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்கின்றனர்.

நாளை பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் காணத்தவறாதீர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்