மறக்க முடியுமாவில் எம்.ஆர்.ராதா

சனி, 3 ஜனவரி 2009 (11:30 IST)
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மறக்க முடியுமாவில் நடிகவேள் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாக உள்ளது.

தமிழ்த் திரையுலகில் சாதனை படைத்து ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்த திரைப்பட நடிகர், நடிகைகளின் வாழூக்கை வரலாறு மறக்க முடியுமா என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினிகணேசன், பத்மினி ஆகியோரைப் பற்றிய வரலாறு ஒளிபரப்பானது.

இவர்களை அடுத்து நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாகிறது. எம்.ஆர்.ராதாவைப் பற்றி அவருடைய குடும்பத்தினரும், அவருடன் பணியாற்றிய கலைஞர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஜனவரி 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்