மெகா டிவியில் மார்கழி உற்சவம்

சனி, 20 டிசம்பர் 2008 (11:39 IST)
மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி மெகா டிவியில் ஆண்டாள் பாசுரங்களை பரத நாட்டியத்துடன் விளக்கும் தொலைக்காட்சிப் படைப்பு ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழின் இசையும், இனிமையையும் பறைசாற்றும் வகையில் ஆண்டாள், திருமாலின் மீது கொண்ட பக்தியை விளக்கும் திருப்பாவை பாசுரங்களை 30 நாக்ளுக்கும் மங்கள இசையுடன் ஒளிபரப்பி வருகிறது.

தினமும் காலை 6 மணிக்கு மெகா டிவியில் ஒளிபரப்பாகும் இந்த மதிநிறை மார்கழி நிகழ்ச்சியில், மார்கழி பழனையை திருவல்லிக்கேணி செளந்தர்யா ரத்னமாலா குழுவினர் பாடுகின்றனர்.

திருப்பாவை பாசுர விளக்கங்களை செல்லி சுசித்ரா வழங்குகிறார். பாசுர விளக்க பாடலுக்கு ஏற்ப பரதநாட்டியம் ஆடுகிறார் செல்வி நீரஜா ஸ்ரீநிவாசன்.

வெப்துனியாவைப் படிக்கவும்