சின்னத்திரையில் கால் பதிக்கிறார் சோனியா அகர்வால்

சனி, 13 டிசம்பர் 2008 (11:56 IST)
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நாணல் என்ற தொடர் மூலமாக சோனியா அகர்வால் சின்னத்திரையில் கால் பதிக்கிறார்.

புயல் வீசும்போது ஆலமரம் கூட வேரோடு சாய்ந்துவிடும். ஆனால் அதன் அருகில் இருக்கும் நாணலோ எந்த பாதிப்பும் இன்றி நிமிர்ந்து நிற்கும்.

பெண் என்பவளும் அதுபோலத்தான், தேவைப்படும் நேரத்தில் வளைந்து கொடுக்கும் பெண், பிரச்சினை என்று வரும்போது நிமிர்ந்து நின்று பதிலடி கொடுப்பாள். இந்த கதையையே மையமாகக் கொண்ட தொடர்தான் நாணல்.

இந்த தொடரின் கதை உருவாக்கத் தலைமையாக குஷ்பு சுந்தர் உள்ளார். கதை முடிவானதும் இந்த பாத்திரத்திற்கு யாரை போடுவது என்று யோசித்ததும் சட்டென நினைவுக்கு வந்தவர் சோனியா தான் என்கிறார் குஷ்பு.

மேலும் இந்த தொடரில் ஸ்ரீ, ஏ.ஆர்.எஸ். ரேவதி சங்கரன், ஜோக்கர் துளசி, பானுமதி, விசு, கே.எஸ்.ஜி., வெங்கடேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்