தொலைக்காட்சிகளுக்கு கிளிப்பிங்ஸ், பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், ட்ரெயிலர் அளிப்பதில் திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது, தயாரிப்பாளர்கள் சங்கம்.
தொலைக்காட்சிகளுக்கு இதுவரை இலவசமாக படங்களின் காட்சிகளை அளித்து வந்தது தயாரிப்பாளர்கள் சங்கம். தற்போது இதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. படக்காட்சிகள் இனி வேண்டும் என்றால் தொலைக்காட்சிகள் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஒரு லட்ச ருபாய் அளிக்க வேண்டும். பணம் அளித்தால் மட்டுமே படக்காட்சிகள் தரப்படும்.
இந்த கட்டுப்பாட்டிலிருந்து ஆறு தொலைக்காட்சிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவை:
சன்,ராஜ், ஜெயா, கலைஞர், துVர்தர்ன் மற்றும் ஸீ தொலைக்காட்சி.