குழந்தைகளுக்கான ஓடி விளையாடு பாப்பா

கலைஞர் தொலைக்காட்சியில் குழந்தைகள் பங்கு பெறும் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியை பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா இயக்குகிறார்.

கலைஞர் தொலைக்காட்சியில் பெரியவர்கள் பங்கு பெறும் நடன நிகழ்ச்சிகளான மானாட மயிலாட, ஆட்டம் பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பலத்த வரவேற்பு இருந்தது.

இதையடுத்து இதேப்போன்றதொரு நிகழ்ச்சி குழந்தைகளுக்காக நடத்த கலைஞர் தொலைக்காட்சி திட்டமிட்டது. அதுதான் ஓடி விளையாடு பாப்பா.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் பல சுவாரஸ்யமான பகுதிகள் இடம்பெறும்.

அக்டோபர் 18ஆம் தேதி முதல் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்