விஜய் டிவியில் அமெரிக்காஸ் ஃபன்னியஸ்ட் வீடியோஸ் என்ற நிகழ்ச்சி இனி உங்கள் வார நாட்களை சிரிப்புமையமாக மாற்றப்போகிறது.
நம் அன்றாட வாழ்வின் நகைச்சுவை நிகழ்வுகளை குடும்பத்திடமும், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வது இயல்பு.
சில நிகழ்ச்சிகளை நாம் விவரிக்கும்போதே சொல்லக்கூடமுடியாத அளவிற்கு நாம் சிரிப்பதுமுண்டு. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை அடடா நீ பார்க்காமல் போய்விட்டாயே என்று நம் குடும்பத்திடமும் சொல்லி வருந்துவோம்.
அத்தகைய நகைச்சுவை நிகழ்வுகளை உங்களுக்காக வழங்குவதுதான் 'அமெரிக்காஸ் ஃபன்னியஸ்ட் வீடியோஸ் நிகழ்ச்சியின் குறிக்கோள்.
webdunia photo
WD
அமெரிக்காவின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான இந்நிகழ்ச்சி முதன்முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. மூன்று நிமிடங்கள் தொடர்ந்து சிரித்தாலே நம் தசைகள் எல்லாம் புத்துணர்ச்சிபெறும்.
உங்களை முப்பது நிமிடங்கள் சிரிக்க வைக்கை வருகிறது இந்த அமெரிக்காஸ் ஃபன்னியஸ்ட் விடியோஸ்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்த குறும்பான, நகைச்சுவையான, எதேட்சையாக நடைப்பெற்ற வேடிக்கை நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் இதில் ஒளிபரப்பாகும்.
வரும் செப்டம்பர் 29ஆம் தேதி துவங்கும் இந்த குதூகலம், திங்கள் - வியாழன் இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.
இதனை தொகுத்து வழங்குவது 'ரீல் பாதி ரியல் பாதி' புகழ் ஜெகன் மற்றும் 'திறந்துடு சீசேம்' புகழ் பாபுஜி.