காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொலைக்காட்சி படம்
காந்தி ஜெயந்தியை சிறந்த காந்தியக் கருத்துக்களை முன்வைக்கும் விதத்தில் ஒரு மணி நேர தொலைக்காட்சிப்படம் உருவாக உள்ளது. படத்தின் பெயர் காந்தி கணக்கு.
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
காந்தி போதனைகளில் முக்கியமான உயிர்க்கொலை செய்வது பாவம், பிறரைக் குறை பேசக்கூடாது, பெரியவர்களை மதிக்க வேண்டும், பொய் சொல்லக்கூடாது, உண்மையாக நடப்பது, திருடாமை, தீண்டாமை, தீயவைகளை நாடாதிருத்தல் போன்ற கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மனோரமா நடித்துள்ளார். அதாவது காந்தி கணக்கு' என்ற வார்த்தை எதனால் வந்தது? அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை விளக்கும் பாத்திரமேற்றுள்ளார் மனோரமா.
இந்த தொலைக்காட்சிப் படம் காந்தி ஜெயந்தியன்று கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.