மறக்க முடியுமா‌வி‌ல் எ‌ம்‌ஜிஆ‌ர்

கலைஞ‌ர் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ஒ‌ளிபர‌‌ப்பா‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் மற‌க்க முடியுமா ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் த‌மிழக‌த்‌தி‌ன் மு‌ன்னா‌ள் முதலமை‌ச்ச‌ர் மறை‌ந்த எ‌ம்‌ஜிஆ‌‌ரி‌ன் வரலாறு இட‌ம்‌பிடி‌க்க உ‌ள்ளது.

சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ``மறக்க முடியுமா?''

இ‌தி‌ல் புக‌ழ்பெ‌ற்ற நப‌ரி‌ன் வா‌ழ்‌க்கை வரலாறை ஒ‌ளிபர‌ப்‌பி நேய‌ர்களை அவரது ‌‌நினைவுக‌ளி‌ல் மூ‌ழ்க‌டி‌க்க வை‌க்‌கிறது.

இதில் இன்று முதல், அடுத்த 6 வாரங்களுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாக உள்ளது.

எம்.ஜி.ஆர். வாழ்ந்த இடங்கள், பழகிய நண்பர்கள், இயக்குநர்கள், அவரை வை‌த்து பட‌ம் இய‌க்‌கிய திரைப்பட தயாரிப்பாளர்களின் பேட்டியும் இடம் பெறுகிறது.

த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தனது இளமைக்கால நண்பரைப் பற்றி கூறுவது‌ம் இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ன் ‌சிற‌ப்ப‌ம்சமாகு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்