மக்கள் தொலைக்காட்சியில் மணிச் செய்திகள்

மக்கள் தொலைக்காட்சியில் இனி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை முதன்மைச் செய்திகள் ஒளிபரப்பப்பட உள்ளது.

webdunia photoWD
தற்போது மக்கள் தொலைக்காட்சியில் நாள் ஒன்றுக்கு 8 முறை செய்திகள் ஒளிபரப்பாகி வருகிறது. உலக நடப்புகள் அனைத்தையும் மக்களுக்கு வழங்கும் வகையில் இந்த செய்திகள் அமையும்.

மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாவது ஆண்டு கொண்டாட்டத்தையொட், செப்டம்பர் 6ஆம் தேதி முதல் மணிச் செய்திகள் துவங்க உள்ளது.

முக்கிய நிகழ்வுகளையும், மற்றவர்கள் தொடத் தயங்கும் விஷயத்தின் பின்னணியையும் துணிச்சலோடு வெளி உலகத்திற்கு தெரிவிக்கும் மக்கள் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு மணிச் செய்திகளை தயாரித்து ஒளிபரப்ப முனைந்துள்ளது.