மக்கள் டிவியின் 3ம் ஆண்டு துவக்கம்

மக்களோடு மக்களாக மக்களுக்காகவே நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வரும் மக்கள் தொலைக்காட்சி 2 ஆண்டுகளைக் கடந்து தற்போது 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

webdunia photoWD
மூன்றாம் ஆண்டின் துவக்கத்தைக் கொண்டாடும் வகையில் மதுரஇராஜமு‌த்தைம‌ன்ற‌த்‌தில் சனிக்கிழமை மாலை சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

விழாவிற்கு மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குகிறார். விழாவில் மக்கள் தொலைக்காட்சியின் நிறுவனரும், மருத்துவருமான இராமதாஸ் பேருரையாற்றுகிறார்.

மாலை 4 மணியவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு துவங்குகிறது இந்த விழா. நாட்டுப்புறப்பாட்டு, உருமி மேளம், காவடி ஆட்டம், கலைச்சங்கம், அதிர்வேட்டு என தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் வளர்த்த கலை நிகழ்ச்சிகள் களைகட்டப்போகிறது.

கவிஞர் திருப்பூர் கிருட்டிணன், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், இயக்குநர் சீமான், இயக்குநர் அமீர் உள்ளிட்டவர்கள் மக்கள் தொலைக்காட்சியைப் பற்றி உரையாற்ற உள்ளனர்.

நெல்லைத் தமிழ், குமரித் தமிழ், சென்னைத் தமிழ் என பல்வேறு தமிழ்களைப் பற்றி அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் பேசுவார்கள்.

ப‌ல மு‌க்‌கிய ‌தலைவ‌ர்களு‌ம், நப‌ர்களு‌ம் ப‌ங்கே‌ற்கு‌ம் இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி ம‌க்க‌ள் தொலை‌க்கா‌ட்‌சி‌‌யி‌ல் நே‌ரிடையாக ஒ‌ளிபர‌ப்பாக உ‌ள்ளது.