விஜய் டிவியில் ‌விரை‌வி‌ல் மாயலோகம்!

புதிய முயற்சிகள், யாரும் இதுவரை செய்யாத புதிய பல கான்செப்டுகளுடன் நேயர்களை எப்போதும் தங்கள் வசம் வைத்துக் கொள்ளும் விஜய் டிவியின் மற்றுமொரு புதிய முயற்ச்சிதானமாயலோகம்.

இந்த மாய உலகத்தில் பெயரைப் போலவே மாயாஜாலம், மந்திரம், தந்திரம் என எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கும்!

webdunia photoWD


மாயலோகம் எனும் இடத்தை 'ராஜா நாக்கிமுக்கி' ஆண்டு வருகிறார். அவரின் ராணி 'மின்னல் இடையாள்' தனது அழகைப் பற்றியே எப்போதும் எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பார். எந்த வகையிலாவது தன்னை குதூகலப்படுத்தி, சிரிக்க வேண்டும் என்பது ராணியின் தீராத ஆசை, கனவு, எல்லாம்! இவர்களை சுற்றி எப்போதும் குள்ள சகாக்கள் அமைச்சர்களாக உலா வருவர்.

புதுமையை எதிர்ப்பார்க்கும் ராணியின் உற்சாகப் பசியைத் தீர்க்க, அப்சரா மாயக்கண்ணி ராணிக்காக, பூலோகத்திலிருந்து தலை சிறந்த மாயாஜால கலைஞர்களை கடத்திக் கொண்டு அவர்களை மாயலோகத்தில் பலவித மாயாஜாலங்களை செய்ய வைக்கிறார். ராஜா நாக்கிமுக்கியாக பாலாஜி, ராணி மின்னல் இடையாளாக ஆஷா, அப்சரா மாயக்கண்ணியாக கவிதா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

ராணிக்காக புரியப்படும் இந்த மாயாஜாலங்களும், தர்பாரில் நடைபெறும் நகைச்சுவை காட்சிகளின் கலவைதான் ரா‌ன் இ‌ந்‌தியா மாயலோகம் எனும் நிகழ்ச்சி.

webdunia photoWD
விஜய் டிவியில் வரும் செப்டம்பர் 07, முதல் ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு மாயலோகம் ‌நிக‌ழ்‌ச்‌சி ஒளிபரப்பாகும்.

அசர வைக்கும் வித்தைகளில் அசாத்திய மாயாஜாலங்களை செய்ய இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து தலை சிறந்த மேஜிக் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பர் என்பது குறிப்பிடதக்கது.