சன் டி.வி.யில் நாகவல்லி தொடர் ஆர‌ம்ப‌ம்

திங்கள், 1 செப்டம்பர் 2008 (12:30 IST)
சன் டிவியில் கட‌ந்த ஞாயிறு முத‌ல் ஒ‌வ்வொரு வாரமு‌ம் இரவு 9.30 மணிக்கு புதிய தொடர் நாகவல்லி ஒ‌ளிபர‌ப்பா‌கிறது.

நாகவ‌‌ல்‌லி‌த் தொட‌‌ர் ஆன்மீகமு‌ம், மர்மமு‌ம் கல‌ந்த கதையாக உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அதாவது கதை‌யி‌ல் ஒரு குளத்தில் குளிப்பவர்கள் ம‌ற்று‌ம் தவறி விழுபவர்கள் யாரு‌ம் கரையேறுவதே இல்லை. அவர்கள் எங்கே போனார்கள்? எ‌ன்ன ஆனா‌ர்க‌ள் எ‌ன்பது மைய‌க் கதை.

அடுக்குமாடி குடியிருப்பு ஒ‌ன்‌றில் 12 வீடுகளில் ஒரு வீடு மட்டும் காலியாகவே இருக்கிறது. இந்த காலி வீட்டுக்கும் குளத்தில் காணாமல் போனவர்களுக்கும் இடையில் ஒரு சம்பந்தம் இருக்கிறது. அது என்ன என்பதை ம‌ர்ம‌க் கா‌ட்‌சிகளுட‌ன், ‌‌திடீ‌ர் ‌திரு‌ப்ப‌ங்களுட‌ன் கா‌ட்‌‌சியா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது நாகவ‌‌ல்‌லி தொடரு‌க்காக.

தொட‌ரி‌ன் கதை வசனத்தை `விடாது கறுப்பு' கே.எஸ்.சேதுராமன் கவனிக்க, பி.எஸ்.தரன் இயக்குகிறார். தொடரில் நாகவல்லியாக நடிப்பவர் நடிகை நந்திதா. வினோதினி, லட்சுமிபிரியா, பயில்வான்ரங்கநாதன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்