சனிக்கிழமை தோறும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காபி வித் அனு நிகழ்ச்சியில் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் காபி வித் அனு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடன் அனுஹாசன் கலந்துரையாடுவார்.
இந்த நிகழ்ச்சிக்கு பெரும் சிறப்பு சேர்க்கும் வகையில் புகழ்பெற்ற எழுத்தாளரும், தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி மொழிகளில் 90க்கும் மேற்பட்டப் படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ள பாலச்சந்தர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
webdunia photo
WD
இந்த நிகழ்ச்சியின் மூலம், பாலச்சந்தர், தனது அனுபவங்களையும், திரைத்துறைக்கு வரவிரும்பும் இளைஞர்களுக்கு, வெற்றிக்கான ரகசியத்தையும் பகிர்ந்து கொள்கிறார்.
webdunia photo
WD
அவருடன் நடிகர் சாருஹாசனும் அவரது நடிப்பு அனுபவங்களையும், அந்த கால நினைவுகளையும் விஜய் டிவி நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.