சன் டிவியில் இன்று முதல் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் செந்தூரப்பூவே.
ராடான் டிவி தயாரிக்கும் இந்த தொடரில் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்களும் விருப்பங்களுமே முக்கியக் கதை.
இந்த தொடரின் மையக் கதை, ஒரு மலேசிய தமிழ் நாவலின் வடிவமைப்பு. மலேசியாவில் நடந்த நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவலே தொடராகிறது.