‌கலச‌ம் தொட‌ரி‌ல் ரம்யா கிருஷ்ணன்

சனி, 12 ஜூலை 2008 (12:02 IST)
வெ‌ள்‌ளி‌த்‌திரை‌யி‌ல் பல ஆ‌ண்டுகளாக கல‌க்‌கி‌க் கொ‌ண்டிரு‌ந்த ர‌ம்யா ‌கிருஷ‌்ண‌ன் கலச‌ம் எ‌ன்ற தொட‌ர் மூலமாக ‌சி‌ன்ன‌த்‌திரை‌க்கு‌ள் நுழை‌கிறா‌ர்.

சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரு‌கிறது கலசம் தொட‌ர்.

webdunia photoWD
திருமணத்துக்குப் பின் நடி‌ப்‌பி‌ல் இரு‌ந்து‌ ‌வில‌கி இரு‌ந்த ரம்யா கிருஷ்ணன், கலசம் தொடரின் கதையை‌க் கேட்டதும் சின்னத்திரை தொடரில் நடிக்க ஒ‌ப்பு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இ‌ந்த தொட‌ரி‌ன் கதையை எழுது‌ம் கு‌ட்டி ப‌த்‌‌மி‌னி, தொட‌ரி‌ல் நடி‌க்கவு‌ம் செ‌ய்‌கிறா‌ர். குட்டி பத்மினியின் மகள் கீர்த்தனாவும், ரம்யாகிருஷ்ணனின் தங்கை வினயா கிருஷ்ணனும் இணைந்து தொடரை தயாரிக்கிறார்கள்.

வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்கத்துப் பெண்ணாக, ஆண் ஆதிக்கத்தை எதிர்க்கும் போர்க் குணம் கொண்டவராக இதில் ரம்யாகிருஷ்ணன் தோன்றுகிறார்.

ஆண்களுக்கு நிகராக வேலை பார்க்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பின் தொடரும் பிரச்சினை, யதார்த்த சம்பவங்கள் எ‌ன்பதை மையமாக‌க் கொ‌ண்டு‌ள்ளது கலச‌ம் தொட‌ர்.

ரம்யாகிருஷ்ணனுடன் தேவன், சுதா சந்திரன், விஜய் கிருஷ்ணராஜ், மெட்டி ஒலி வனஜா, ஸ்ரீதர், மனோகர் நடிக்கிறார்கள்.

தொடரின் கதையை எழுதுவதுடன் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார், குட்டி பத்மினி. திரைக்கதை: தேவிபாலா. வசனம்: ஜெகன் மோகன். ஒளிப்பதிவு: பிரேம். இசை: டி.இமான். இயக்கம்: எம்.ஆர். செந்தில்குமார் ப்ளான். வி.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ஆர்.டி.வி. ஸ்டார் லைப் நிறுவனமும் இத்தொடரை உருவாக்குகிறது.

புகை‌ப்பட‌ம் : ந‌ன்‌றி ‌தின‌த்த‌ந்‌தி