சுயதொழில் செய்யும் மகளிருக்கு உதவும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தரவிருக்கிறது வசந்த் தொலைக்காட்சி.
இதன் முதல் கட்டமாக சுய தொழில் மூலம் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக முன்னேறி வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வரும் மகளிருக்கு வசந்த் டி.வி. கைகொடுக்கிறது.
மகளிர் சுயஉதவிக் குழுவினரின் தயாரிப்புப் பொருட்களை வசந்த் டி.வி.யில் அறிமுகப்படுத்தி மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வில் பொருளாதார முன்னேற்றத்தை கொண்டு வர விரும்புகிறது.
சுய உதவிக் குழு மகளிர் தங்கள் குழுவின் மூலம் வசந்த் டி.வி.க்கு இது தொடர்பான விண்ணப்பங்களை அனுப்பலாம்.