பொதுவாக காமெடித் தொடர் என்றால் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே ஒளிபரப்பாகும். ஆனால் வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9.30 மணிக்கு மெகா டிவியில் ஒளிபரப்பாகிறது தினம் தினம் தீபாவளி காமெடித் தொடர்.
கூட்டுக் குடும்பத்தின் சிறப்பை நகைச்சுவையுடன் கலந்து தந்திருக்கிறார் தொடரின் இயக்குநர் ராஜேந்திரன்.
கதையில், மருமகள்களிடம் என்னதான் சண்டை என்றாலும், அவர்கள் எக்காரணம் கொண்டும் குடும்பத்தை விட்டு பிரிந்து போய் விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார், மாமியார். மூன்று மருமகள்களில் மூத்த மருமகள் சாதனா தான் தனிக்குடித்தனத்துக்கு முயற்சிக்கிறார். அந்த முயற்சியை மாமியார் தனக்கே உரிய சாதுர்யத்துடன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் தினம் தினம் தீபாவளியின் கதை.