தகதிமிதா 250வது வார‌ ‌விழா

சனி, 7 ஜூன் 2008 (13:08 IST)
ஜெயா டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளி பரப்பாகி வரும் `தகதிமிதா' நிகழ்ச்சி 250 எபிசோடுகளை தா‌ண்டி‌வி‌ட்டது.

இந்திய கலாச்சாரத்தின் வேர்களே அதனுடைய சாஸ்திரிய கலைகள்தான். அப்படிப்பட்ட அற்புதமான பாரம்பரியமான பரத கலையை வளர்க்கவும் பாதுகாக்கவுமான கலைத் தொண்டுதான் `தகதிமிதா' நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல நடனமணிகள் மற்றும் நடிகைகளான பானுப்பிரியா, ஷோபனா, சுகன்யா, விமலா, இந்திரஜா, `அண்ணி' மாளவிகா, மோகினி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட நடனமணிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.

250 வாரங்களை முடித்த இந்த நிகழ்ச்சியின் வெற்றியை கொண்டாடும் வகையில் நாளை சென்னை நாரத கான சபா அரங்கில் மாலை 6.30 மணிக்கு விழா நடைபெறவுள்ளது.

நடிகை வைஜெயந்திமாலா குத்துவிளக்கு ஏற்றி தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சிகளை நடிகை மோகினி தொகுத்து வழங்குகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்