300வது வார‌த்‌தி‌ல் ஜாக்பாட்

சனி, 7 ஜூன் 2008 (12:48 IST)
ஜெயா டி.வி.யில் ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `ஜாக்பாட்' நிகழ்ச்சி தனது 6-வது ஆண்டில் 300-வது வாரத்தை நிறைவு செய்கிறது.

இதுவரை ஜாக்பாட்டில் உற்சாகப் பெருக்குடன் பங்கேற்றுள்ள 2,400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிசுகளை வென்றுள்ளனர். நடிகை குஷ்பு அவருக்கே உரித்தான தமிழில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

300-வது ஜாக்பாட் போட்டியில் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் டெல்லி கணேஷ், சச்சு, காத்தாடி ராமமூர்த்தி மற்றும் அபஸ்வரம் ராம்ஜி ஆகியோர் ஓர் அணியாகவும் புதிய தலைமுறை நடன இயக்குனர்கள் ராம்ஜி, ஜானி, பிரபு ஸ்ரீனிவாஸ் மற்றும் ராஜஆகியோர் இன்னொரு அணியாகவும் மோதுகின்றனர்.

எந்த அணியினர் வெற்றி வாகை சூடப்போகிறார்கள் என்பதை நாளை ஞாயிறு இரவு 8 மணிக்கு தெரிந்து கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்