இ‌ன்று காபி வித் அனு‌‌வி‌ல்...

சனி, 24 மே 2008 (13:02 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காபி வித் அனு நிகழ்ச்சியில் இந்த வார சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா கலந்து கொள்கின்றனர்.

காதல் திருமணம் புரிந்த இந்த காதல் ஜோடிகள் தங்களது காதல் அனுபவங்களையும், திருமண வாழ்க்கையைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை அனுவுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

உதயநிதி தனது குடும்பத்தினரைப் பற்றியும், திரைப்படத் துறையில் நுழைந்தது பற்றியும், அடுத்த படம் பற்றியம் மனம் திறந்து பேசுகிறார்.

இவர்களோடு இயக்குநர் தரணி மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி இன்று இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்