கலைஞர் தொலைக்காட்சியில் ஆனந்தம் விளையாடும் வீடு

சனி, 24 மே 2008 (13:00 IST)
கலைஞர் தொலைக்காட்சியில் அடுத்த மாதம் 16ஆம் தேதி முதல் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற புதிய தொடர் ஆரம்பமாகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் இந்த தொடரில் சுபலேக சுதாகர், மவுனிகா, தேவானந்த், அச்சமில்லை கோபி, விஜய் ஆனந்த், சரத், வினோதினி, தேவிபிரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஒரு தந்தை, அவருக்கு மூன்று மகன்கள். அன்பான குடும்பமாக இருக்கிறது. 2 மகன்களுக்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் மருமகள் மூலமாக வீட்டில் புயல் வெடிக்கிறது. இதற்கிடையே தூக்கு தண்டனைக் கைதியான சீதா இந்த குடும்பத்தில் நுழைகிறார். அவரால் பிரச்சினை பெரிதாகிறதா, சரியாகிறதா என்பதை அழகான திரைக்கதையுடன் எடுத்திருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்