மக்கள் தொலைக்காட்சியில் தற்போது பல புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. அவை அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணிக்கு கற்போம் கணினி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இது முழுக்க முழுக்க இல்லத்தரசிகளுக்கானது. இல்லத்தரசிகளும் கணினியின் உபயோகத்தை அறிந்து, கணினியை பயன்படுத்தக் கற்றுத் தரும் நிகழ்ச்சியாகும் இது.
வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு திரைக்கடல் ஓடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இது ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், ஈடுபடும் எண்ணம் உடையவர்களுக்கும் வழிகாட்டும் நிகழ்ச்சியாக அமையும்.
தினந்தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தக ஆர்வலர்களுக்கு என்ற நிகழ்ச்சியில் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் கூறும் அறிவாளிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள முக்கூடல் நிகழ்ச்சியில் நேயர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கப்படும் எண் மற்றும் தமிழ்ச் சொற்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்து பரிசுகளை அள்ளிச் செல்லலாம்.