அரசு கேபிள் டிவிக்கு அனுமதி

வியாழன், 3 ஏப்ரல் 2008 (14:56 IST)
தமிழக அரசு நடத்த திட்டமிட்டுள்ள அரசு கேபிள் டிவிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசின் நிறுவனமான அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன், சென்னையில் கேபிள் டிவி நடத்த அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது.

அதற்கான அனுமதியை தகவல் ஒலிபரப்புத் துறை நேற்று பிறப்பித்தது.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கேபிள் டிவி நடத்த அந்தந்த மாவட்ட அஞ்சல் துறையினரிடம் அனுமதி பெற்று, பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்