வரும் திங்கள் முதல் இரவு 8.30 மணிக்கு அகத்தியன் இயக்கத்தில் சிம்ரன் நடித்த அனுவும் நானும் ஒரு மாதத் தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
ஜெயா டிவியில் ஸ்ரீபிரியா இயக்கத்தில் தொடங்கிய ஒரு மாதத் தொடரான சிம்ரன் திரையில்' தொடர் முடிந்துவிட்டது.
வருடக் கணக்கில் இழுத்துக் கொண்டிருக்கும் மெகா தொடர்களுக்கு மத்தியில் ஒரு மாதத்தில் முடிந்துவிடுவதால் இந்த தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கூடியுள்ளது.
இதுபோன்ற குறுகிய காலத் தொடர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஒருமித்த கருத்தாகவும் உள்ளது.