தமிழ் சிறக்க தமிழன் வெற்றி பெற

சனி, 1 மார்ச் 2008 (14:39 IST)
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு - தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளருக்கான தேடல்.

webdunia photoWD
தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு உணர்வு. தமிழ் என்பது ஒரு வாழ்க்கை முறை. நமது உள்ளத்தில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை மாறி, பாரதிதாசன் அச்சப்பட்டதுப் போல தமிழ் மொழியின் புகழ் இக்காலத்தில் சரியத் துவங்கி விட்டது.

தமிழ் வீதிகளில் தமிழ்தான் இல்லை என்ற ஒரு நிலை உருவாகி விடுமோ என்று எண்ணுகையில், விஜய் டிவி "தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு" எனும் தமிழகத்தின் சிறந்த பேச்சாளரை தேர்வு செய்யும் நிகழ்ச்சியை விரைவில் ஒளிப்பரப்பு செய்ய உள்ளது.

தமிழ் பேசும் திறனை வளர்த்திட நமது சந்ததினருக்கு முதன் முறையாக ஒரு மேடையை ஏற்படுத்தித் தருகின்றது விஜய் டிவி.

மொழிப் பற்றின் உணர்ச்சி மற்றெந்த உண்ர்ச்சியை விடவும் மேலோங்கி நிற்பதால் தமக்கென ஒரு மேடை அளிக்கப்படும் போது அதனை தக்க வழியில் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கின்றோம்.

முதன் முறையாக அந்த ஒரு மேடையை தான் விஜய் டிவி, தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு மூலம் அறிமுகப்படுத்துகின்றது.

கோவை, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் சென்னை ஆகிய 6 இடங்களில் சிறந்த தமிழ் பேச்சாளருக்கான வலை வீசப்பட்டது.

போட்டியாளர்கள் "ஒரு சொல்", "ஒரு எழுத்து" ஒரு வாக்கியம்" எனும் அடிப்படையில் வைக்கப்பெற்ற மூன்று குவளைகளிலிருந்து, ஏதேனும் ஒரு சீட்டை தேர்ந்தெடுத்து உடனே தங்குதடையின்றி தமிழில் பேச முனைந்தனர்.

இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களான தமிழ் கடல் நெல்லை கண்ணன் மற்றும் அறிவுமதி பங்கேற்றனர்.

6 மண்டலங்களிலிருந்து சுமார் 200 பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக 30 பேரை மட்டும் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

'பழமொழிக் குட்டிக்கதை', 'காட்சிக்கு பேச்சு சுற்று', 'பட்டிமன்றம் சுற்று', 'சிலேசை' போன்ற புதிய பல சுற்றுகளுக்கு இவர்களை அறிமுகப்படுத்தி, இவர்களின் தமிழ் ஆற்றலை சோதித்து இறுதியாக ஒருவர் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளராக உருவெடுக்கப் போகிறார்!

இவருக்கு சிறந்த பேச்சாளருக்கான விருதை தவிர ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது தமிழில் தேர்ச்சிப் பெற்ற ஜேம்ஸ் வசந்தன் ஆகும்.

புதிய முயற்சி, சிறந்த பேச்சாளர்கள், முற்றிலும் மாறுப்பட்ட சுற்றுகளுடன் களத்தில் இரங்கும் இந்த புதிய நிகழ்ச்சி, விஜய் டிவி எடுக்கும் இந்த அரிய முயற்ச்சிக்கு எப்போதும் போல் நேயர்களின் ஆதரவு இருக்கும் என்பதில் ஐயமில்லை!

ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு - மார்ச் 02 முதல் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு, தமிழுக்காக தமிழர்களுக்காக விஜய் டிவியில் கண்டு மகிழ்ந்து, தமிழ் மொழியின் பெறுமையை போற்றுவோம்!