தென்னிந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒரு திருநங்கை தொகுத்து வழங்கும் புத்தம் புதிய நிகழ்ச்சி "இப்படிக்கு ரோஸ்" வரும் பிப்ரவரி 28 முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
திருநங்கை ரோஸ் இந்நிகழ்ச்சியை விஜய் டிவிக்காக நடத்துவதுடன், சமுதாய அக்கறை கொண்ட பல நிகழ்வுகள் இதில் கலந்தாலோசிக்கப்படுகிறது.
நம் சமுதாயத்தில் நடக்கும் பல விஷயங்களை அலசி, நம்மைச் சுற்றியுள்ளவர்களை புரிந்துக் கொள்ளவும், மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசி பாதிக்கப்பட்டவர்கள் தன் பிரச்சனையை முன்வைக்கும் பாதையாக இந்நிகழ்ச்சி இருக்கும்.
சில கல்லூரிகளில் நடந்த பாலியல் துன்புறுத்தல்களும், மாடல் அழகிகளின் வாழ்க்கை, நட்சத்திர தம்பதிகளிடையே பெறுகி வரும் கருத்து வேறுபாடுகள், விவாகரத்து இவற்றை தவிர்க்க நாம் செய்ய வேண்டியது என்ன? பிரச்சனைகளுக்கு யார் காரணம். இதற்கெல்லாம் என்ன தீர்வு? என்று ஒவ்வொரு தலைப்பிற்கும் சிறந்த வல்லுனர்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
மருத்துவத்துவ ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள் என சமுதாயத்தில் உயரிய பொறுப்பில் இருப்பவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பிரச்சனைப் பற்றியும் அதற்கான தீர்வையும் அலசி ஆராய்கின்றனர்.
வித்யாசமான மனிதர்கள், சொல்லமுடியாத சம்பவங்கள், உறவுகளின் முறன்பாடு, நடைமுறைகளை மீறும் மனேபாவம் - இது போன்ற எல்லா விஷயங்களையும் ரோஸிடம் பகிர்ந்து கொள்ளலாம்!
"சிறந்த கல்வி மற்றும் பல நாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற அனுபவங்களைக் கொண்டு திருநங்கையாகிய ரோஸ் நடத்தும் இந்நிகழ்ச்சி வெற்றியடையும்"என விஜய் டிவியின் சேனல் ஹெட், திரு. கே.ஸ்ரீராம் கூறுகிறார்.
webdunia photo
WD
முற்றிலும் மாறுப்பட்ட "இப்படிக்கு ரோஸ்" நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 28 முதல் வியாழந்தோறும் இரவு 10 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்!