தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செய்திகளை மக்களிடையே கொண்டு செல்ல கேப்டன் டி.வி. என்ற பெயரில் தனி தொலைக்காட்சியை துவக்கவுள்ள விஜயகாந்த், அதனை ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று துவக்குவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, தன்னைப் பற்றியும், தனது கட்சியின் கொள்கைகளையும் இணையத்தில் ஏற்றுவதற்கும் ஒருவர் முன்வந்ததாகவும், அதற்கு அனுமதி அளித்த விஜயகாந்த், நிதி உதவி அளிக்க முன்வராததால் அது அப்படியே நின்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.