குமரன் சில்க்ஸ் பாடும் ஆஃபிஸ் இறுதி‌ச்சுற்று

வெள்ளி, 18 ஜனவரி 2008 (12:49 IST)
விஜய் டிவியில் கடந்த 10 வாரங்களாக நடந்து வந்த குமரன் சில்க்ஸ் பாடும் ஆஃபிஸ் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று 19ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

webdunia photoWD
குமரன் சில்க்ஸ் பாடும் ஆஃபிஸ் நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் 40 பேர் நிகழ்ச்சியின் முதல் சுற்றில் தேர்வாகினர்.

இவர்களில் கால் இறுதி மற்றும் அரை இறுதி சுற்றுகளை சந்தித்து தற்போது இறுதிப் போட்டிக்கு 8 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இறுதிப் போட்டியில் வெற்றியாளர்களை பின்னணி இசை பாடகர்களாக கிரிஷ், ராஜலட்சுமி மற்றும் இசையமைப்பாளரான ஜோஷ்வா ஸ்ரீதர் ஆகியோர் தேர்வு செய்கின்றனர்.

பயிற்சி எடுக்க அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என இந்த மூன்று நடுவர்களும் போட்டியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் இசையமைப்பாளர் ஜோஷூவா ஸ்ரீதர் குரல் வளத்தை மேம்படுத்த புதிய பல முறைகளை போட்டியாளர்களுக்கு கற்றுத் தருகிறார்.

இந்த லைட் மியூசிக் தனிநபர் இறுதிச் சுற்றில் யார் வெற்றிப் பெற போகிறார் என்பதை நாளை ஜனவரி 19, 2008 அன்று இரவு 7 மணிக்கு குமரன் சில்க்ஸ் பாடும் ஆஃபிஸ் நிகழ்ச்சியில் காணத்தவறாதீர்கள்.