கார் வெல்லும் அதிர்ஷ்டசாலி!

வெள்ளி, 11 ஜனவரி 2008 (14:40 IST)
மிகவும் எளிமையான கேள்விகளுடன் துவங்கி, பிரம்மாண்ட அரங்கத்தில் அரங்கேறும் ‘அப்போலோ கம்ப்பூட்டர் எடுகேஷன் திறந்திடு சீசேம்' நிகழ்ச்சியில் என்றுமே கலாட்டாவுக்கு பஞ்சமில்லை. ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் அப்போலோ கம்ப்பூட்டர் எடுகேஷன் திறந்திடு சீசேம் ல் கடந்த சில வாரங்களாக ஏகப்பட்ட பரபரப்பு.

லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள், புடவைகள், வீட்டு உபயோக சாதனங்கள் இதோடு 5 லட்சம் மதிப்புள்ள மகேந்திரா ரெனால்டு லோகன் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இதற்காக, ஒவ்வொரு வாரத்தின் முடிவில் ஒரு போட்டியாளர் இந்த லோகன் காருக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்படி தேர்வாகிய 8 பேரும் வரும் ஞாயிறு அன்று போட்டியிடுகின்றனர். இந்த 8 பேரில் ஒருவருக்கு 5 லட்சம் மதிப்புள்ள மகேந்திரா ரெனால்டு லோகன் கார் பொங்கல் போனஸ்ஸாக காத்துகொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் ஆதிராஜ், போட்டியாளர்களை நன்கு ஊக்கப்படுத்தி, அவர்களை குழப்பி சுவாரஸ்யத்தை கூட்டுகிறார். பார்வையாளர்கள் மற்றும் நேயர்களைப் போலவே அவருக்கும் கதவுக்கு பின் என்ன பரிசு இருக்கும் என திரக்கும் வரை தெரியாது.

லீனா, ரூபினி, தீபா, மஞ்சு, செல்வகுமாரி, மீனாட்சி, லோகநாதன், நிரஞ்சனி ஆகிய இந்த 8 பேரில் ஒருவருக்கு மட்டுமே அடிக்கப் போகிறது இந்த அதிர்ஷ்டம்!

சந்தோஷம், ஏக்கம், வருத்தம் என பலதரப்பட்ட உணர்வுகள் வெளியாகும் இந்த சுவாரஸ்ய அப்போலோ கம்ப்பூட்டர் எடுகேஷன் திறந்திடு சீசேம் கேம் ஷோவை வரும் ஞாயிறு, ஜனவரி 13, 2008 இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் காணத்தவறாதீர்கள்!

வெப்துனியாவைப் படிக்கவும்