சூரசம்ஹாரம் நடைபெற்றதாக புராணங்களில் கூறப்பட்டுள்ள திருச்செந்தூரில் இந்த விழா மிகப் பிரசித்தம். அங்கு இன்று மாலை சூரசம்ஹாரம் விழா நடக்கிறது. இதையொட்டி கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கே திறக்கப்பட்டது.
1.30 மணிக்கு விசுவரூப தரிசனம், காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை ஆகியன நடந்தது. மாலையில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதைக் காண தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிகிறார்கள்.
இன்று மாலை 4 முதல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை ராஜ் டி.வி. நேரடியாக ஒளிரப்பு செய்கிறது.