சன் டிவி, கலைஞர் டிவி மோதலில் சிக்கிய தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (11:59 IST)
சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கிக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.

webdunia photoWD
விசயம் இதுதான் தமிழக அரசு விருது வழங்கும் விழாவை தீபாவளி அன்று சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பபோவதாக கலைஞர் டிவி அநிவித்தது. அதற்குள் முந்திக்கொண்ட சன் டிவி நிகழ்ச்சி அன்று படம்பிடிக்கப்பட்ட விழாகாட்சிகளை தொகுத்து அரைமணிநேர நிகழ்ச்சியாக சன் டிவியில் காட்டியது.

இதனால் கொதித்துப் போன கலைஞர் டிவி, சன் டிவி உரிமை வாங்கி வைத்திருந்த கில்லி திரைப்படத்தை தங்கள் டிவியில் ஒளிப்பரப்பியது. இதற்குள் பிரச்னை பற்றிக் கொள்ள இரண்டு நிகழ்ச்சியும் அரைமணிநேரத்திற்குள் நிறுத்தப்பட்டது.

சேட்டிலைட் உரிமையை நாங்கள் வாங்கியிருக்கிறோம் எப்படி அதை கலைஞர் டிவியில் ஒளிபரப்ப முடியும். ஏ.எம்.ரத்னம் மீது சட்டரீதியாக வழக்கு தொடருவோம் என்று சன் டிவி தரப்பிலிருந்து கூறுகிறார்கள்.

ஆனால் ஏ.எம்.ரத்னம் பட உரிமையை கலைஞர் டிவிக்கு தரவில்லையாம் அப்புறம் எப்படி அவர்கள் ஒளிபரப்பினார்கள் என்பது கேள்விக்குறி. இதற்கிடையில் இன்று தயாரிப்பாளர் சங்கத்தில் இது தொடர்பாக பஞ்சாயத்து நடந்து வருகிறது.