ஒரு சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு மாதிரியான நிகழ்ச்சி வேறு ஒரு சேனலில் வேறு ஒரு பெயரில் வேறு சில நீதிபதிகளுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்.
அதற்கெல்லாம் விதிவிலக்காக வித்தியாசமான நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காஃபி வித் அனு நிகழ்ச்சியில் இந்த வார விஐபிக்கள் யார் தெரியுமா? அழுது வழியும் தொடர்களுக்கு இடையே சிரிக்க வைத்து கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கும் கனாக் காணும் காலங்கள் தொடரின் நாயகர்களும், நாயகிகளும் தான்.
கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்கும் பச்சை, பாலா, ஜோ, பாண்டி, வினீத், உன்னி, கார்த்திகா, மனோ, மிண்டு ஆகியோர் அனுவை பேட்டி எடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
தங்களது நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றியும், நடிப்பதும், இடைஇடையே படிப்பது பற்றியும் இவர்கள் அனுவிடம் மனம் திறக்கிறார்கள்.
வரும் சனிக்கிழமை 9.30க்கு ஒளிபரப்பாக உள்ள காஃபி வித் அனுவில் கனாக் காணும் காலங்களின் நாயகர்களின் கும்மாளத்தை காணத் தவறாதீர்.