நடிகர் விசுவிடம் உதவியாளராக இருந்த பாஷ்கராஜ் தனியே சென்று ராஜ் டிவியில் அகட விகடம் என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.
அரட்டை அரங்கம் அளவிற்கு அகட விகடமும் ஓரளவிற்கு பேசப்பட்டது. இந்த நிலையில் ராஜ் டிவியில் ஆறு மனமே ஆறு என்ற மெகா தொடரையும் தொடங்கினார் பாஷ்கராஜ்.
இந்த தொடரில் விசுவையும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பி விசுவிடம் கேட்டார்.
விசுவோ, "தாராளமாக நடிக்கிறேன்" என்று உற்சாகமாகக் கூறியிருக்கிறார். சிஷ்யருக்கு விசு கொடுத்த மரியாதையை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார் பாஷ்கராஜ்.