கடந்த 5 அண்டுகளாக ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்தி வருபவர் நடிகை குஷ்பூ. இவருக்கு என்றே தனி நேயர்கள் பட்டாளமே உள்ளது. உடை அலங்காரம், தமிழ் உச்சரிப்பு இவையெல்லாம் குஷ்பூவை ரசிக்க வைத்தன.
தற்போது, ஜாக்பாட் நிகழ்ச்சி நடத்தி, நடத்தி குஷ்பூவுக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டதால், சின்னத்திரைக்கு சற்று ஓய்வு கொடுக்க அவர் முடிவு செய்து விட்டார்.
கணவருடனும், மகள்களுடனும் வீட்டில் இருக்க விரும்புவதாகவும, எனவே தான் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்க்கப்பதாகவும் நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.