ஜெயா டிவி.யில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஜாக்பாட். இந்நிகழ்ச்சி நாளையோடு 250 வாரத்தை எட்டுகிறது.
இதையொட்டி, இந்நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்ட காட்சிகளுடன் நாளை ( 24 - 06 - 07 ) ஒளிபப்பாகிறது. திரை நட்சந்திரங்கள் சுஹாசினி, ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் இயக்குனர் சுசி கணேசன் ஆகியோர் ஒரு அணியாகவும், இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம், அனுராதா சிறிராம் மற்றும் சுவர்ணலதா ஆகியோர் மற்றொரு அணியாகவும் 250 வது போட்டியில் மோதுகின்றனர்.