விரை‌வி‌ல் வ‌ண்டலூ‌‌ர் பூ‌ங்காவை இர‌விலு‌ம் பா‌ர்‌க்கு‌ம் வச‌தி

வியாழன், 12 நவம்பர் 2009 (12:22 IST)
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உ‌ள்ள உ‌‌யி‌ரின‌ங்களை இர‌விலு‌ம் பா‌ர்‌க்கு‌ம் வகை‌யி‌‌ல் பு‌திய வச‌தி ‌விரைவ‌ி‌ல் துவ‌ங்க உ‌ள்ளது. அத‌ற்கான ப‌ணிக‌ள் மெ‌த்தனமாக நட‌ப்பதா‌ல் இரு ‌பி‌ரிவுகளாக ‌பி‌ரி‌த்து நட‌த்த முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழகத்துக்கு அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக பல்வேறு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலேயே முதல்முறையாக, வண்டலூர் உயிரியல் பூங்காவில், இரவு நேர உலவிட பூங்கா (நைட் சபாரி) அமைக்க திட்டமிடப்பட்டது. வெளிநாட்டு பார்வையாளர்களையும் கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காக இந்த `நைட் சபாரி'யை தொடங்கும் எண்ணம் ஏற்பட்டது.

இதன்மூலம், பல அ‌ரிய விலங்குகளின் இயல்பான இரவு நேர வாழ்க்கையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியும். இரவுநேரத்தில் சுதந்திரமாக இயற்கை சூழலில் திரியும் விலங்குகளை, சுற்றுலா பயணிகள், பேட்டரி கார்களில் அமர்ந்து பார்வையிட முடியும். மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை இந்த `நைட் சபாரி'யில் விலங்குகளை பார்வையாளர்கள் காணலாம். இப்பூங்கா 310 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகள் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது. முன்னதாக, இத்திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டபோது, 2009-ம் ஆண்டில் `நைட் சபாரி' திறக்கப்படும் என்று அப்போதைய தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி தெரிவித்திருந்தார். ஆனால், இ‌ந்த ப‌ணிக‌ள் ‌மிக மந்தமாக நட‌ப்பதா‌ல் இ‌ன்று‌ம் பா‌‌தி வேலை கூட முடி‌க்க‌ப்பட‌வி‌ல்லை. இத்திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுவதற்கு பல்வேறு துறைகளிடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என கூறப்படுகிறது.

`நைட் சபாரி' அமைக்கும் பணியை இரண்டாக பிரித்து செயல்படுத்தவு‌ள்ளதாக தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌‌வி‌க்‌கி‌ன்றன. இ‌தி‌ல் ஒரு பகுதியில் முழுக்க, முழுக்க விலங்குகள் இருக்கும். மற்றொரு பகுதியில், பயணிகள் உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்கான வசதிகளும், குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற வசதிகளு‌ம், பொழுதுபோக்கு அம்சங்களு‌ம் அமைய உ‌ள்ளது. அப்பகுதியில் உணவுவிடுதியும் அமைக்கப்படவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்