தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் சென்னைத் தீவுத்திடலில் வாழைத் திருவிழா இன்று துவங்குகிறது.
இன்றும், நாளையும் நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் 22 வகையான வாழைப்பழங்கள் கண்காட்சியாக வைக்கப்படும்.
இவற்றை பொதுமக்கள் வாங்கி சாப்பிடலாம். ஒரே இடத்தில் 22 வகையான வாழைப் பழங்களை சாப்பிடும் வாய்ப்பு இந்த கண்காட்சி மூலம் கிடைத்துள்ளது.
இந்த விழாவிற்கான அழைப்பிதழை சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளர் வெ. இறையன்பு உருவாக்கி உள்ளார்.
இந்த கண்காட்சியில் வாழையின் பல்வேறு வகைகளை கண்டு களிக்கவும், வாழையின் பல்வேறு உணவு வகைகளை உண்டு மகிழவும், வாழையின் சிறப்பை விளக்கும் கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழவும வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது வாழைத் திருவிழா என்பதால் அழைப்பிதழை வாழை இலை வடிவிலேயே அமைத்துள்ளனர்.
இந்த வாழைத் திருவிழாவை இன்று காலை 9 மணியளவில் தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி துவக்கி வைத்தார்.
இன்றும், நாளையும் ஏராளமான பார்வையாளர்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.