சென்னை எழும்பூர்-வாரணாசி இடையே ரயில்

செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (11:50 IST)
சென்னை எழும்பூர்-வாரணாசி இடையே புதிய வாராந்திர ‌விரைவு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூர்-வாரணாசி-சென்னை எழும்பூர் இடையே புதிய வாராந்திர ‌விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூர்-வாரணாசி (வண்டி எண்: 4259) வாராந்திர ‌விரைவு ரயில் ரெயில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 12-ந் தேதி முதல் வியாழக்கிழமைதோறும் மதியம் 1 மணிக்கு புறப்படும். சனிக்கிழமை காலை 4.50 மணிக்கு வாரணாசி போய்ச் சேரும்.

மறுமார்க்கத்தில், வாரணாசி-சென்னை எழும்பூர் (வண்டி எண்: 4260) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வாரணாசியில் இருந்து ஞாயிறுதோறும் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 10.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இந்த ரயில், கூடூர், விஜயவாடா, நாக்பூர், கிட்டார்சி, ஜெபல்பூர், அலகாபாத் வழியாக இந்த ரெயில் செல்லும். முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது எ‌ன்று கூறப்பட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்