மக்கு: இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சுட்டாரு!
ஜக்கு: ஏன் என்ன தப்பு செஞ்ச?
மக்கு: 33 எழுதச் சொன்னார்! தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல 3 போடச்சொன்னாரு
ஜக்கு: இது கூட தெரியலையா?
மக்கு : ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்னு கேட்டேன்!
-------------------
மக்கு: இதான் என்னோட குழந்தை
ஜக்கு: ரொம்ப அழகா இருக்கே! என்ன பேரு?
மக்கு: அதைத்தான் நானும் கேக்கறேன், ஆனா அது பேசறதே புரியமாட்டேங்குது. ---------------
கிரிக்கெட் போட்டியில் மக்கு!
நடுவர் மக்குவிற்கு எல்.பி.டபிள்யூ அவுட் கொடுக்கிறார். மக்கு திட்டிக் கொண்டே வருகிறான்.
ஜக்கு: ஏன் திட்ற, பந்து பேட்ல பட்டுச்சா?
மக்கு: இல்லை!
ஜக்கு: பின்ன பந்து ஸ்டம்பை விட்டு வெளியே போற பந்தா?
மக்கு: இல்ல கால்ல பட்டு அவ்வளவு தூரம் போகுது அதுக்கு போய் எல்.பி. கொடுப்பானா?
ஜக்கு: ஏண்டா மக்கு காலைல ஏன் உங்க அப்பா உன்னைப் போட்டு அடிச்சாரு?
மக்கு: ஆமாம்! கோழிக்கு தண்ணி வச்சேன்!
ஜக்கு: அதுக்கு போயா அடிச்சாரு?
மக்கு: சுடுதண்ணி வைடா அப்பத்தான் கோழி முட்டை போடும்போது அவிச்ச முட்டையா போடும்னு எங்க தாத்தா சொன்னதைப் போய் நம்பித் தொலைச்சேன். ----------------
மக்கு நாய் வாங்கச் செல்கிறான்...!
கடைக்காரர்: இந்த நாயோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, அதோட ஒரு காதை திருகினீங்கன்னா நீங்க சொல்றதக் கேக்கும் இன்னொரு காதைத் திருகினீங்கன்னா இப்ப டைம் என்னன்னு சொல்லும்.