என்னது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயர்ஸ் அத்தனை பேரும் சூதாட்டம் ஆடினாங்களா? எப்படி?
ஆமாம் திடீர்னு பச்சை டிரஸ் போட்டுட்டு இறங்கினா? எங்களுக்கு தெரியாமயா போயிடும்?
-----------------------------
கிரிக்கெட் வீரர்: "சத்தியமா நம்புங்க, தலையெல்லாம் ஒரே பேன், சொறியாம என்ன செய்யச் சொல்றீங்க? இப்படி சொறிஞ்சது மூலமா எவ்வளவு கோடி சம்பாதிசீங்கன்னு என்ன போட்டு உயிர எடுத்தீங்கன்னா நியாயமா?"
---------------------------------
போலீஸ்: அந்த ஓவர்ல 14 ரன் விட்டுக் கொடுத்தீங்க! சரியா? எவ்வளவு சம்பாதிச்சீங்க?
அருகில் இருந்த அணியின் கேப்டன்: நம்புங்க சார்! உண்மையில அந்த ஓவர்ல 22 ரன் கொடுக்கவேண்டியது. ஏதோ சூதாட்டக் காரங்க தயவால 14 ரன்னோட போச்சு.
இஷாந்த் சர்மா: உடனே என்னோட முடியோட நீளத்தை குறைங்க!
சலூன் காரர்: ஏன் சார் நல்லாத்தானே இருக்கு?
இஷாந்த் சர்மா: ஓடி வந்து பவுலிங் போடும்போது முடி ஆடுது! இது ஏதோ சூதாட்டக்காரங்களுக்கு சிக்னல்னு சொல்லிட்டாங்கன்னா?
------------------------------------
போலீஸ்- வீரரிடம்: ஆமாம்! நீங்க ஏன் சூதாட்டக்காரங்களுக்கு பணம் கொடுத்தீங்க?
வீரர்: பின்ன என்ன சார்? பேட்ஸ்மென் கிட்ட போய் என் ஓவர்ல 28 ரன் அடிக்கணும்னு பணம் கொடுத்தாங்க. என் கேரியர் என்ன ஆறது? அதானால 28 வேணாம் 14ஆ குறைச்சுக்க சொல்லுங்கன்னு நான் அவங்களுக்கு பணம் கொடுத்தேன். சண்டைக்காரன் கால்ல விழறதவிட சாட்சிக்காரன் கால்ல விழுந்துரலாமே! ------------------------------
புக்கி: நீங்க இந்த ஓவர்ல ஒரு நோ-பால் ஒரு வைடோட சேர்த்து 17 ரன்கள் கொடுக்கணும்? ஆனால் 15 ரந்தான் கொடுத்தீங்க ஏன்?
வீரர்: சார் நான் நியுமராலஜியில் நம்பிக்கை உள்ளவன் 1+7=8; எட்டுல எனக்கு தோஷம் அதனாலதான் என் ராசி நம்பரான 1+5=6 கொடுத்தேன். இது தப்பா?
போலீஸ்: (இஷாந்திடம்): ஏன் இன்னிக்கு, அதுவும் குறிப்பா, முடிய ஒட்ட வெட்டீனீங்க?
இஷாந்த்: ஏன் சார் இதுல என்ன தப்பு! என் இஷ்டம் நான் வெட்டினேன்!
போலீஸ்: நீங்க இன்னிக்கு ஒட்ட முடிவெட்டுவீங்கன்னு பெட்டிங்ல பல கோடி ரூபா பேரம் நடந்துருக்கு உங்களுக்கு எவ்வளவு பங்கு?