கற்றது களவு

வியாழன், 10 ஜூன் 2010 (19:48 IST)
கண்ணுக்கு கண் மாதி‌ி களவுக்கு களவு. ஏமாற்றப்பட்ட ஒருவன் இந்த சமூகத்தை ஏமாற்றத் துணிவதுதான் கதை. இந்த ஒன் லைனுக்குள் சுவாரஸியம் எனும் ஏர் ஜெட் என்‌ஜினை வைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். முதலில் ஜோராக ஓடும் என்‌ஜின் பல இடங்களில் உதறுகிறது.

webdunia photo
WD
ராமேஸ்வரத்தில் மாலை மாற்றிக் கொள்ளும் கிருஷ்ணா, விஜயலட்சுமி ஜோடியை டெல்லி போலீஸ் துரத்துகிறது. உயிரை கையில் பிடித்து ஓடும் அவர்களை காப்பாற்றுகிறார் சம்பத். அவர் யார் என்றால் உள்ளூர் போலீஸ். அட, நல்லாயிருக்கே என்று நிமிர்ந்து உட்காரும் போது கட் பண்ணி பிளாஷ்பேக்குக்கு போகிறார்கள்.

மாணவர் வங்கி என்று ஒரு புதிய திட்டத்தை கண்டுபிடிக்கிறார் கிருஷ்ணா. இதனை அவர் வங்கி அதிகா‌ி சந்தான பாரதியிடம் சொல்ல, அவரோ அது தனது திட்டம் போல் அறிவித்து பணத்தையும் புகழையும் சுருட்டுகிறார். நியாயம் கேட்கும் கிருஷ்ணாவுக்கு கிடைப்பது நித்திய அடி.

விமானப் பணிபபெண்ணாகும் கனவு கைகூடாமல் வீட்டவிட்டு வெளியேறும் விஜயலட்சுமியுடன் கூட்டணி வைக்கும் கிருஷ்ணா பிறகு ஒவ்வொருவராக ஏமாற்றத் தொடங்குகிறார். அவர்களின் அஜென்டாவுக்குள் எதிர்பாராமல் மத்திய மந்தி‌ரியும் சிக்குகிறார். மந்தி‌ி இந்த ஜோடியை கொல்ல ஆட்களை அனுப்புகிறார். ஜோடி தப்பித்ததா என்பது கிளைமாக்ஸ்.

முதல் படத்திலிருந்து ரொம்பவே மெருகேறியிருக்கிறார் கிருஷ்ணா. ஏமாறுவதும் ஏமாற்றுவதுமான கேரக்டர் அவருக்கு இயல்பாகவே பொருந்துகிறது. விஜயலட்சுமிதான் பாவம். உடம்பைப் போலவே ரொம்ப மெலிந்த நடிப்பு. நவரசம் தாண்டவமாட வேண்டிய இடங்களில் பரசங்கள் மிஸ்ஸிங்.

கிருஷ்ணா ஏமாற்றும் இடங்கள் எல்லாம் படு அமெச்சூர். இன்னும் நன்றாக கற்பனைக்கு சிறகு வி‌ரித்திருக்கலாம். சின்னி ஜெயந்தை ஏமாற்றுவதும், மத்திய மந்தி‌ரியின் படுக்கை அறை வரை போவதும் டூ மச். டெல்லி போலீஸ் அதிகா‌ி கல்யாண், உள்ளூர் போலீஸ் அதிகா‌ி சம்பத் இருவரும் நிறைவாக செய்திருக்கிறார்கள். பால்ஜே-யின் பின்னணி இசையும் பாடல்களும் சுமார். படத்தின் மிகப் பெ‌ரிய பிளஸ் நீரவ் ஷாவின் கேமரா. ராமேஸ்வரம் காட்சிகளில் கேமரா விளையாடுகிறது.

லா‌ஜிக் ஓட்டைகளை அடைத்து ரசிகர்களை ஏமாற்றாமலிருந்திருந்தால் அறிமுக இயக்குனரை பாராட்டியிருக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்