அபியும் நானும்

மனித உறவுகளின் ஈரமான பக்கத்தை படமாக்கும் ராதாமோகனின் இன்னொரு முயற்சி, அபியும் நானும். இதில் அப்பா, மகள் உறவின் நுட்பமான பகுதிகளை காட்சிப்படுத்த முயன்றுள்ளார்.
webdunia photoWD

மகள் மீது அ‌ப‌ரிதமான பாசம் கொண்ட அப்பாவாக பிரகாஷ்ரா‌ஜ். மகளை முதல் நாள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அந்தப் பி‌ரிவையே தாங்க முடியாமல் தவிப்பவர். மகள் வளர்ந்து தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கும்போது அதனை பிரகாஷ்ராஜால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

பிள்ளைகள் வளரும்போது கூடவே பெற்றோர்களும் தங்கள் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி படம் நிறைவடைகிறது.

பாசமிக்க அப்பா கதாபாத்திரத்தை தனது நடிப்பால் சிறப்பாக்கியிருக்கிறார் பிரகாஷ்ரா‌ஜ். மகள் படிக்கப் போன இடத்தில் சர்தார்‌ஜி இளைஞனை காதலிப்பது தெ‌ரிந்து உடைந்து போவதும், வீட்டிற்கு வரும் காதலனை மட்டம்தட்ட எடுக்கும் முயற்சிகளும், சபாஷ்ரா‌ஜ்.

மினி ஸ்கர்ட் இல்லாமலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் த்‌ரிஷா. வில்லியாகவே பார்த்துப் பழகிய ஐஸ்வர்யா பாந்தமான அம்மா கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்.

பிரகாஷ்ரா‌ஜ் கதை சொல்லும் விதமாக, இயல்பாக தொடங்கும் படத்தில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களையும் தனித் தனி குணாம்சங்களுடன் சித்த‌ரித்திருப்பது படத்தின் மீதான ஈர்ப்பை அதிக‌ரிக்கிறது.

பிச்சைக்காரனாக வந்து குடும்பத்தில் ஒருவராக மாறும் குமரவேல், பிரகாஷ்ரா‌ஜை கட்டி அணைத்து பாசத்தைப் பொழியும் குண்டு சர்தார்‌ஜி, பிரகாஷ்ராஜை கலாய்க்கும் குழந்தைகள் என ரசிக்க படத்தில் நிறைய உண்டு.

்‌ரிஷாவின் காதலனாக வரும் கணேஷ் நம்பிக்கையளிக்கும் அறிமுகம். படிப்படியாக அவரது கதாபாத்திரத்தின் இமேஜை உயர்த்துவது, திரைக்கதையின் பலம்.

வித்யாசாக‌ரின் பின்னணி இசையும், ப்‌ரீத்தாவின் ஒளிப்பதிவும் படத்தின் சிறப்பம்சங்கள். ரசிக்க படத்தில் நிறைய இருந்தும், மொழியில் இருந்த மே‌ஜிக் இதில் மிஸ்‌ஸிங். பார்க்க வேண்டிய படம்.