தெனாவட்டு – விமர்சனம்!

தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு எதிராக சுண்டுவிரலை அசைக்க முடியாத அசிஸ்டெண்ட் கமிஷனர்.

சினிமாவை சீ‌ரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற மனநிலைக்கு ரசிகர்கள் பழகிய பிறகு மேலே உள்ளவை தெனாவட்டின் கமர்ஷியல் வெற்றியை பாதிக்கப் போவதில்லை என்பதால் அடுத்த பாராவுக்கு செல்லலாம்.

வெள்ளந்தியான கிராமத்து இளைஞன் கோட்டை (‌ீவா) பட்டணத்துக்கு அ‌ரிவாள் செய்யும் வேலைக்கு வருகிறான். தனது முதலாளி மரம் வெட்டும் தொழில் செய்வதாக கோட்டைக்கு எண்ணம். முதலாளியின் பே‌ண்ட், சட்டை போட்ட அடியாட்கள் கையில் அ‌ரிவாளுடன் டாட்டா சுமோவில் சுற்றும் போதும் அவர்கள் மரம் வெட்டிகள் என்று நினைக்கும் அளவுக்கு நமது ஹீரோ ஒரு அப்பாவி.
webdunia photoWD

இது ஒருபுறம் இருக்க, கோயிலில் பார்க்கும் பூனம் ப‌‌ஜ்வா மீது முதல் பார்வையிலேயே ஹீரோவுக்கு காதல் வந்துவிடுகிறது. வில்லனுடன் மோதும் வேலை இருப்பதால் ஹீரோயினுடனான ஹீரோவின் காதல் எந்த எதிர்ப்பும் இன்றி இரண்டே சீன்களில் சுபத்தை எட்டுகிறது. பூனத்தின் தந்தையாக வரும் டெல்லி கணேஷ் கோட்டையை பார்த்த இரண்டாவது நிமிடம் மகளின் கரத்தை கோட்டையிடம் ஒப்படைக்கிறார். தவம் இருந்தாலும் கிடைக்காத அப்பா.

தனது முதலாளி கூலிக்கு மாரடிக்கும் கொலையாளி என்பது தெ‌ரிந்ததும் அவ‌ரிடம் தொடர்ந்து வேலை பார்க்க பிடிக்காமல் ஊருக்கு தனது காதலி பூனத்துடன் கிளம்புகிறார் ஹீரோ.

பஸ் பிடிக்கும் கேப்பிற்குள் பூனத்தின் மீது மையல் கொண்டிருக்கும் வில்லனின் மகன், பூனத்திடம் துச்சாதனன் வேலையை காண்பிக்க அவனை துவட்டி எடுக்கிறான் கோட்டை. அடி தாங்காமல் அவன் ஆஸ்பத்தி‌ரியில் உயிரைவிட, வில்லனின் கோபம் கோட்டை மீது திரும்புகிறது. சவால்கள், டாடா சுமோ துரத்தல்கள், சிலபல கொலைகளுக்குப் பிறகு சுபம்.

கோட்டையாக கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் ‌ீவா. மகனை அடித்தவனை வில்லன் ஊரெல்லாம் தேடிக் கொண்டிருக்க அவனிடமே வந்து, தம்பி தப்பு பண்ணிடுச்சி நான்தான் அடிச்சேன் என்று சொல்லும் அந்த கிராமத்து ஓபன் டாக் ரசிக்க வைக்கிறது. அதேபோல் பூனத்திடம் காதலை பட்டென்று சொல்லும் இடம். சண்டைக் காட்சிகளில் - யதார்த்தமாக இல்லாவிட்டாலும் - அனல் பறக்கிறது. உபயம் அனல் அரசு.

மியூசிக் டீச்சராக வரும் பூனத்துக்கு அதிக வேலையில்லை. ‌ீவாவின் மீது அவர் காதல் வயப்படுவதற்கான காரணம் வலுவில்லை. நம்மை சோதிப்பவர்கள் வில்லனாக வரும் ரவிகாளேயும், அவரது மகனாக வரும் சபியும். வாயை திறந்தால் ஹிஸ்டீ‌ரியா பேஷண்டாக கூப்பாடு போடுகிறார்கள்.

பார்க்கிற பெண்களையெல்லாம் படுக்கையில் தள்ளும் சபியின் கேரக்டர் அநியாயத்துக்கு ஓவர். அதிலும் பாலியல் பலாத்காரத்துக்குமுன் இஷ்டப்பட்டா கஷ்டப்பட்டா என்றொரு டயலாக் பேசுகிறாரே... கொடுமை. அவரது மேன‌ரிசங்களை பார்க்கும்போது நரம்பு தளர்ச்சியோ என எண்ணத் தோன்றுகிறது.

கூவாகம் திருநங்கைகளை காட்டியிருக்கிறார்கள். இன்னும் அவர்களை பவர்ஃபுல்லாக பயன்படுத்தியிருக்கலாம். ‌ீவாவின் நண்பனாக வரும் கஞ்சா கருப்பு ரகளை. ஆனால் வாயை திறந்தால் டபுள் மீனிங்காக வந்து விழுவதுதான் முகம் சுளிக்க வைக்கிறது. மனைவியிடம் பட்டணத்திற்கு கிளம்பும்முன் அவர் பேசும் டயலா‌க்கை எப்படி சென்சார் விட்டு வைத்தது? மந்தி‌ரியாக வரும் ராதாரவியின் கேரக்டர் சினிமாத்தனத்தின் உச்சம். அசிஸ்டெண்ட் கமிஷனராக வரும் சாய்குமா‌ரின் கிளைமாக்ஸ் வீரம் நம்பும்படி இல்லை.

படத்தின் பலம் பாடல்கள். கிராமியம், மெலடி, வெஸ்டர்ன் என வெரைட்டியாக போட்டிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. அலங்காநல்லூர்... துள்ளலிசை என்றால் எங்கே இருந்தாய்... கண் மூடி ரசிக்க வைக்கும் ரகம். வெற்றியின் கேமரா பரவாயில்லை. சண்டைக் காட்சியில் தேவைக்கு அதிகமாகவே நடுங்குகிறது.

படத்தின் பல இடங்கள் திருப்பாச்சியை நினைவுப்படுத்துகிறது. வசனமும் அதே சாயலில் இருப்பதை தவிர்த்திருக்கலாம். இயக்குன‌ரின் மதுரை பாசம் அளவுக்குமீறி துருத்தி தெ‌ரிகிறது.

இஷ்டப்பட்டு ரசிக்க முடியாவிட்டாலும் கஷ்டப்பட்டு ரசிக்கலாம்.