கொடைக்கானல் - விமர்சனம்!

கள்ளன் போலீஸ் சேஸிங்குக்கு நடுவில் ஒரு காதல் கதை. இரண்டில் ஏதாவது ஒன்றில் ஜெயித்திருந்தாலும் படம் பிழைத்திருக்கும். ஆனால்...

குட்டி குட்டி திருட்டுகள் நடத்தும் திலக்கும், சேகரும் செய்யாத கொலை குற்றம் ஒன்றில் மாட்டுகிறார்கள். போலீஸ் விலங்கிடமிருந்து தப்பிக்க கொடைக்கானல் காட்டில் தஞ்சமடைகிறார்கள் இருவரும். இரண்டு ஆண்பிள்ளைகளை வைத்து காட்டுக்குள் என்ன பண்ணுவது? வருகிறார் கதாநாயகி பூர்ணா. நடிகையான அவருக்கு தாயும், முறைமாமனும்தான் வில்லன்கள். பணத்துக்காக பைனான்சியருக்கு பாய் வி‌ரிக்க விரும்பாமல் காட்டுக்குள் புகுந்து கொள்கிறார்.

webdunia photoWD
அப்படி காடு ஏகிய திருடர்களை போலீஸும், நடிகையை தாய்மாமனும் தேடு தேடுயென தேடுகிறார்கள். இதனிடையே, தனக்கு உதவி செய்யும் திலக் மீது பூர்ணாவுக்கு அது வந்துவிடுகிறது. ஆம், காதல். ஜோடி சேர்ந்த பின் நண்பன் எதற்கு? நண்பனுக்காக உயிர் துறக்கிறார் சேகர். காதலர்கள் ஒன்று சோந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

புதுமுகங்கள் திலக்கும், சேகரும் கொடுத்த வேடத்தை கெடுக்காமல் நடித்திருக்கிறார்கள். ஆனால் மனதில் தங்க இது போதாதே. நடிப்பில் அவர்கள் போக வேண்டிய ூரம் மிக அதிகம். பூர்ணாவின் நடிப்பில் பழுதில்லை. காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். குறத்தி மேக்கப்பில் அவரை உலவவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

செந்தில், சிசர் மனோகர் காமெடி ‌ிலாக்ஸ் ஏ‌ரியர். ஏன்றாலும் திலக்கும், பூர்ணாவும் தங்கியிருக்கும் பங்களாவில் பேய் உலவுவதாக நினைத்து அவர்கள் பயப்படவதெல்லாம் அரை ூற்hண்டு பழக்கமுள்ள் காட்சிகள். மாத்தி யோசிங்கப்பா.

போலீஸ் அதிகா‌ரி அலெக்ஸும், வில்லன் காண்டீபனும் எவ்வித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் வந்து போகிறார்கள். இசையும், ஒளிப்பதிவும் கொடைக்கானலின் இதம்.

அதரபழசு கதையும், திரைக்கதையும் இம்சிப்பதால் ரசிக்க வேண்டிய கொடைக்கானல் வேனலாக தகிக்கிறது.