காத்திருப்பது வீண் என புரிந்து மனைவிக்காக விவாகரத்தும் வாங்கித் தருகிறார். கூண்டிலிருந்து விடுபட்ட சாயாசிங் காதலனை தேடும்போது எதிர்பாராத ட்டுவிஸ். இறுதியில் அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.அக்னி பார்வையும், அமிலம் தோய்த்த வார்த்தையுமாக பார்த்தபினை வறுத்தெடுக்கும் காட்சிகளில் சாயாசிங், சபாஷ் சிங்! கடுகுபோல் எப்போதும் பொரிந்து கொண்டேயிருக்கும் அவரின் முகம் கேரக்டருக்கு பொருத்தி போகிறது.பார்த்திபனின் ஒருவரி காமெடி இந்தப் படத்திலும் ஒர்க்- அவுட் ஆகியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இவர் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை கூறும்போது, அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.சாயாசிங்கின் அப்பாவாக ஆனந்த்ராஜ். கீறல் விழுந்த ரிக்கார்டாக அவர் திரும்ப திரும்ப பேசும் வசனம் காதில் ீசுறல் போடுகிறது. மெக்கானிக் ஷாப் கருணாசின் காமெடி, ரிலாக்ஸ் டைம். டீ கடை காமெடியில் அப்படியே வடிவேலு சாயல்.பார்த்திபன், வேலைக்காரி உரையாடலை சாயாசிங் தவறாக புரிந்து கொள்வது, பார்த்திபன் தன்னை பின் தொடர்வதாக சாயாசிங் நினைக்கும் காட்சிகள் என சில இடங்களில் மட்டுமே மதுமிதா தெரிகிறார். மற்ற இடங்கள் வளவளா!
படித்த விவரமறிந்த ஒரு பெண் பிடிக்கவில்லை என்பதற்காக கணவனை இவ்வளவு தூரம் வெறுப்பது, சாயாசிங் பாத்திரப்படைப்பின் பெருங்குறை.
காதலன் ஸ்ரீகாந்த் வேறு பெண்ணை திருமணம் செய்யப் போகும் செய்தி சாயாசிங்கிற்கு தெரியவருவதும், அதன் பிறகு அவர் மனம் கணவனை நோக்கி திரும்பவுதும் கற்பனை வறட்சி.
கதைக் கேற்ற ஒளிப்பதிவு. காதுகளுக்கு ஒவ்வாமையாக பாடல், பின்னணி இசை.
முழுமை பெறாத கதாபாத்திரங்கள், செயற்கையான காட்சியமைப்புகள், சரியாக கோர்க்கப்படாத திரைக்கதை, சாயம் போன மவுனராக கதை என முதல் படத்தில் முத்திரை பதிக்க தவறியிருக்கிறார் மதுமிதா.