ஹாரி பாட்டரும் ஃபீனிக்ஸ் கட்டளையும்.

Webdunia

புதன், 25 ஜூலை 2007 (12:14 IST)
டேனியல் ராடிலிப், ருபர்ட் கிரின்ட், எம்மா வாஸ்டன் அலனா போன்அம் கஸ்ட்டர், மைக்கேல் கம்பான், ரிச்சர்ட் கிரிப்பித்ஸ், கேரி லுக்குமேன் நடிப்பில், மைக்கேல் கோல்டன் பெர்க் திரைக்கதையில் ஸ்லாவோமிர் இட்ஜிலாக் ஒளிப்பதிவில், டேவிட்யாட்ஸ் இயக்கியுள்ள படம். தயரிப்பு வார்னர் பிரதர்ஸ் தமிழில் வெளியிட்டுள்ள நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

ஜெ.கே. ரெளலிங் என்கிற பெண் எழுத்தாளர் எழுதிய 'ஹாரிபாட்டர்' கதைகள் ஆங்கிலத்தில் சக்கைப்போடு போட்டு விற்பனையில் சாதனை படைத்தவை. அந்தக் கதைகளை திரைப்படங்களாக உருவாக்கியும் வசூலில் வரலாறு படைத்து வருகிறார்கள். 'ஹாரிபாட்டர்' ரகப் படங்களில் இப்போது வந்திருக்கும் படம் 5ஆம் பாகம். 'ஹாரிபாட்டரும் ஃபீனிக்ஸ் கட்டளையும்'.

பள்ளி மாணவன் ஹாரிபாட்டர்தான் நாயகன். நம்மூர் நாயகர்களுக்கு சோதனைகளும், துன்பங்களும் வருவது போல அவனுக்கும் வருகின்றன. அவனிடம் உள்ள மந்திரக்கோலால் பலவற்றைச் சாதுர்யமாகச் சமாளித்து வெல்கிறான். இருப்பினும் வில்லனாக வரும் தீயசக்திகளின் கை ஓங்குகிறது. ஒரு கட்டத்தில் ஹாரிபாட்டரின் நண்பர்கள் தீய சக்திகளிடம் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களை விடுவிக்க வேண்டுமானால் ஹாரிபாட்டரிடம் உள்ள அதிசய சக்தியை தாறை வார்க்க வேண்டும் என்று மிரட்டப்படுகிறான். இதை வேண்டாம் என்று நண்பர்கள் தடுக்கிறார்கள். ஆனாலும் நண்பர்களுக்காக அடுத்தவர் மனதில் உள்ளதை அறியும், நடக்கப் போவதை அறியும் மந்திர சக்கியை தாறை வார்த்து நண்பர்களைக் காப்பாற்றி விடுவிக்கிறான் ஹாரிபாட்டர். 'மூழ்காத ஷிப்பே ப்ரண்ட்ஷிப்தான்' என்று மகிழ்ச்சியடைகிறான்.
webdunia photoWD


படத்தில் கதை என்னவோ சாதாரணமாக மாயாஜாலக்கதை போலத் தோன்றினாலும் காட்சிப் படுத்துவதில் மிரட்டியிருக்கிறார்கள். நாயகர்களாக நடிகர்கள் இருக்கலாம். ஆனால் ஒளிப்பதிவாளர், கிராபிக்ஸ் நிபுணர்கள் தான் நிஜமான நாயகர்களாக படம் முழுக்க ஆக்கிரமித்து ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் திறமையால்தான் நாம் வேறு உலகத்தில் நுழைந்த அனுபவம் கிடைக்கிறது.

தீய சக்திகளின் இருப்பிடமும், தீய சக்திகளின் தோற்றங்களும் பிறமிக்கவைக்கும், ராட்சச தோற்றம் கொண்ட பூதம் மேஜிக் பிச்சரை இரண்டு விரலால் ஒரு பூச்சியைப் போல படித்து அலற வைப்பது பயங்கரம். துடைப்பத்துடன் ஹாரிபாட்டரும், நண்பர்களும் பறந்து போவது அசத்தல். அதே போல வினோத உருவம் உள்ள பறக்கும் விலங்கில் ஏறி லண்டன் நகரை பறந்து வருவதும் ஜிவ்வென்று உணர்வூட்டும் காட்சி. இப்படி காட்சிகளால் மிரட்டி நம்மையும் ஒரு குழந்தையாக உட்கார வைத்து ஓர் அம்புலிமாமா கதை சொல்லி அசத்தியுள்ளார்கள்.