முருகா - விமர்சனம்

எ காக்கடயில் டிரீம் பிலிம்ஸதயாரிப்பில் அஷோக், ஸ்ருதிசர்மா, சமிக்ஷா, வடிவேலு, மகாதேவன், ரியாஸ்கான், வின்சென்ட் அசோகன் நடிப்பில் கார்த்திக் ராஜா இசையில் ஆர்.டி.நேசன் இயக்கியுள்ள படம்.

சாதாரண டீச்சரின் மகன் முருகன். பெரிய பணக்காரர் விநாயக மூர்த்தியின் மகள் அமுதா. பள்ளிப் பிராயத்தில் அமுதா மீது முருகனுக்குக் காதல் வருகிறது. இதைக் கேள்விப்பட்டு வி.மூர்த்தியின் ஆட்கள் முருகனைப் பின்னி எடுக்கிறார்கள். ஊரைவிட்டு சென்னை வந்து கொரியர் பாயாக வேலை பார்க்கிறான். அமுதாவும் டாக்டர் படிப்புக்கு சென்னை வருகிறாள். படிக்க வந்த இடத்தில் அமுதாவுக்கு ஒரு பிரச்சினையும் அதனால் அவமானமும் வருகிறது. அதைத் தீர்த்து வைக்கிறான் முருகன். இதன்பிறகு, வெறுத்து ஒதுக்கி வந்த அமுதாவுக்கு முருகன் மீது காதல் வருகிறது. எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பதுதான் "முருகா" க்ளைமாக்ஸ்.

முதல் பாதியில் விலகிப் போகும் காதலி மறுபாதியில் நெருங்கி வந்து ஒன்று சேரும் கதை என்கிற பழைய்ய்ய கதையை-தம்மாத்துண்டு கதையை எடுத்துக் கொண்டு இரண்டரை மணி நேரம் இழுத்து இருக்கிறார்கள்.

புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி அஷோக் நிறைய உழைத்திருக்கிறார். சில இடங்களில் நடித்தும் இருக்கிறார். அப்பாவியாக அவ்வப்போது முகத்தை வைத்துக் கொண்டு நாயகியிடம் பேசும் போது ரசிக்க வைக்கிறார். ஸ்ருதிசர்மா அப்போது மலர்ந்த மலர் போன்ற மலர்ச்சியான முகம். ஆனால் நடிக்க வாய்ப்பில்லை. பார்த்து ரசிக்கும்படியான களையான முகம்.

சமிக்hவை எதற்கு படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள் என்று தெரியவில்லை. சும்மா தலைகாட்டும் ராதா கேரக்டர் கொடுத்து சோதா ஆக்கியிருக்கிறார்கள்.

படத்தில் ஆறுதலாக இருக்கும் என்று வடிவேலுவை எதிர்பார்த்தால்.. ப்ச்! கொரியர் கோபுவாக வரும் பாத்திரம். அதை வைத்து எவ்வளவோ சிரிப்பு காட்டலாம். ஆனால் செய்யவில்லை. சமிக்ஷh-வடிவேலு சம்பந்தப்பட்ட காமெடி சிரிப்பு மூட்டவில்லை. எரிச்சல்தான் வருகிறது.

படத்தில் ஒளிப்பதிவு, இசை, ஸ்பெஷல் எபெக்ட்ஸ், லொகேஷன்ஸஎன எல்லாமே நன்றாக இருக்கின்றன. இருந்தும் என்ன? அமுத்தமில்லாத கதை. சுவையில்லாத திரைக்கதையால் எல்லாமே விரலுக்கு இறைத்த நீராகிவிட்டது.

படம் பெயர் சொல்லும் படம் தான். பார்த்து விட்டுச் சொல்லலாம். அட முருகா!

வெப்துனியாவைப் படிக்கவும்