அயன்

webdunia photoWD
ஏவி.எம். தயா‌ரிப்பில் சூர்யா நடித்திருக்கும் இரண்டாவது படம். கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் வெளிவரும் இரண்டாவது படமும்கூட. சூர்யா ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

இருபத்தைந்து வயது இளைஞராக இதில் நடித்துள்ளார் சூர்யா. சென்னை திருவல்லிக்கேணியில் தொடங்கிய படப்பிடிப்பு நமீபியா, தான்சானியா என வெளிநாடுகளில் தொடர்ந்தது.

நமீபியாவில் பாடல் காட்சி ஒன்றும், தான்சானியாவில் சண்டைக் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டன. தான்சானியா சண்டைக் காட்சியில் கனல் கண்ணனுடன் ஆப்பி‌ரிக்க சண்டைக் கலைஞர்களும் பணியாற்றினர்.

படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஆகாஷ்தீப் சைகல் அறிமுகமாகிறார். இவரைத் தவிர விவேக், பிரபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

எழுத்தாளர்கள் சுபா கதை, வசனம் எழுதியுள்ளனர். ஹாரிஸ் ஜெயரா‌ஜ் இசை. பாடல்கள் வைரமுத்து, நா. முத்துக்குமார், பா. விஜய். ஒளிப்பதிவு எம்.எஸ். பிரபு. சண்டைப் பயிற்சி கனல் கண்ணன். எடிட்டிங் ஆண்டனி.

சன் பிக்சர்ஸ் படத்தை வெளியிடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்