வர்னிகா மூவி மேக்கர்ஸ் அகராதியை தயாரிக்கிறது. க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய, இரவில் ஒரு வானவில் கதையையே அகராதி என்ற பெயரில் எடுக்கிறார்கள்.
குடும்பப் பின்னணியில் உறவுகளின் சிக்கல்களையும் அதனால் உருவாகும் எதிர்மறை விளைவுகளையும் அகராதி சினிமா ஆக்சன் கலந்து சொல்கிறது. பணத்தால் கலாச்சாரங்களை மீறி உறவுகள் சிதறிப் போவதையும் அகராதி காட்சிப்படுத்துகிறது.
webdunia photo
WD
நாகா வெங்கடேஷ் இயக்குனர். பிரதீப், மோனிகா, செளந்தர்யா, அர்ச்சனா, கிரண், பவன் ராஜ்குமார், காயத்ரி ப்ரியா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சத்யன், புவனேஸ்வரி, மூமைத்கான் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சென்னை எண்ணூரில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.
ஒரு பாடலுக்கு மூமைத்கான் ஆடியுள்ளார்.
சந்தர் சி பாபு இசையில் வாலி, தாமரை, கவிவர்மன், அண்ணாமலை ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
ஒளிப்பதிவு பியோன். திரைக்கதை இயக்கம் காகா வெங்கடேஷ்.